சீதப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்த இரு இளைஞர்கள் கைது. 200 கிராம் கஞ்சா, ஒரு டூவீலர் பறிமுதல்.
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் கருணாநிதிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அக்டோபர் 27ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், அருகில் உள்ள சீத்தப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும், இருவரையும் கைது செய்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், சத்திரப்பட்டி, எம் ஜி ஆர் நகரை சேர்ந்த கணேசன் மகன் வீரபாண்டி வயது 20 என்பதும், மற்றொருவர் அருகிலுள்ள சேர்வைக்காரன்பட்டி, காலனி தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் குகனேஷ் வயது 19 என்பது தெரியவந்தது.
எனவே, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூபாய் 2, 000- மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவையும், அவர்கள் ஓட்டி வந்த டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நவம்பர் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணி பட்டி காவல்துறையினர்.