மேட்டு மகாதானபுரத்தில் வாய்க்காலில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, குப்புரெட்டிப்பட்டி கிழக்குகளம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி வயது 48.
இவர் நவம்பர் 3-ம் தேதி சொந்த வேலையாக காலை 9 மணி அளவில் வெளியே சென்றவர், பிறகு பணி முடித்து மேட்டு மகாதானபுரம் வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அறிந்த குருசாமியின் மனைவி சகுந்தலா வயது 38 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த குருசாமியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக
குளித்தலை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் லாலாபேட்டை காவல்துறையினர்