அரவக்குறிச்சி -கொலை வழக்கில் கைதானவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் 11ம் தேதி பதிவான கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளப்பட்டி ஹபீப் நகரைச் சேர்ந்த லெனின் வயது 31, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நவம்பர் 7 ஆம் தேதி மேற்படி எதிரியை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.