எம். பி ஜோதிமணியிடம் விசிக கோரிக்கை

71பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனைக்கு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ரூ. 3. 89 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மற்றும் கண் சிகிச்சை உபகரணங்களை நேற்று வழங்கி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவர்கள் அதன் சிறப்பு அம்சத்தை விளக்கி கூறினார். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பொ. மகாமுனி, மருத்துவ இணை இயக்குனர், மருத்துவர்கள், செவிலியர்கள், விசிக சார்பில் சந்தோஷ், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் இளஞ்சியம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்வின்போது இரவு நேரத்தில் கூடுதலாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என விசிக சார்பில் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி