கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான ஏக்கரில் விவசாயிகள் பூக்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் பூக்களை பரமத்தி, நொய்யல் தினசரி பூ மார்க்கெட்டுக்கு ஏலத்திற்கு கொண்டு வந்தனர். பல்வேறு ஊரிலிருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கிச் செல்கின்றனர்.
இன்று நடைபெற்ற ஏலத்தில் பூக்களில் விலை நிலவரம் (1 கிலோ மதிப்பீட்டில்), குண்டுமல்லி ரூ.1000, முல்லைப்பூ ரூ400, அரளிப்பூ ரூ.120, செவ்வந்தி பூ ரூ.150, ரோஜா பூ ரூ.120, சம்பங்கி பூ ரூ.80, மருவி நாலு கட்டு ரூ.100, துளசி 4 கட்டு ரூ.80க்கும் விற்பனையானது. குண்டு மல்லி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.