கிணற்றை சுத்தம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு.

55பார்த்தது
கத்தாழைப்பட்டியில் கிணற்றை சுத்தம் செய்ய சென்ற வாலிபர் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.


கரூர் மாவட்டம், பள்ளபாளையம் அருகே உள்ள செல்லாண்டி பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் முருகேசன் வயது 37.

இவரும் இவரது சகோதரி லோகாம்பாளின் கணவர் தங்கவேல் ஆகிய இருவரும் நவம்பர் 2ஆம் தேதி மதியம் 12 மணி அளவில், தங்கவேலுக்கு சொந்தமான கிணற்றை சுத்தம் செய்வதற்காக கயிறு கட்டி கிணற்றில் இறங்கியுள்ளார்.

கிணற்றின் உட்பகுதியில் இருந்த செடி, கொடிகளை வெட்டி அகற்றிவிட்டு, மீண்டும் கயிறு மூலம் மேலே ஏறும்போது தவறி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து முருகேசனின் தாயார் பழனியம்மாள் வயது 65 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்த முருகேசன் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி