கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக்கூடம் தரமாக கட்டப்படாததால் அந்த கட்டிடம் உள்வாங்கி விட்டது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தால் 2019 ஆம் ஆண்டு கட்டிடத்தினுடைய உறுதி தன்மையை இழந்துள்ளதால், கட்டிடத்தின் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என பேரூராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு பலகையும் வைத்திருந்தனர். அந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரருக்கு மீண்டும் பொது நூலகம் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கி உள்ளது. அவர் போல தரமற்ற முறையில் கட்டிடம் கட்ட வாய்ப்பு உள்ளது. ஆகவே அந்த ஒப்பந்ததாரருக்கு பேரூராட்சியில் மீண்டும் அனுமதி வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகாமுனி என்கிற வன்னியரசு தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு இன்று அளித்தனர்.