இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இஅடையேயான போட்டி நாளை (பிப்.23) நடைபெற உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “பாகிஸ்தானை விட இந்திய அணியில்தான் வெற்றியை தீர்மானிக்கும் வீரர்கள் அதிகம் உள்ளனர். நாங்கள் சற்று பலவீனமாக உள்ளோம். இந்தியாவின் பலமே, நடு மற்றும் கீழ் வரிசை பேட்டிங்கில்தான் உள்ளது. பல போட்டிகளில் அவர்களே வெற்றியை தீர்மானித்துள்ளனர். அத்தகைய வீரர்கள் எங்களிடம் இல்லை” என கூறியுள்ளார்.