கரூர், கடவூர் தாலுக்கா தென்னிலை அருகே காக்கா வீரியம்பட்டியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (60). இவர் கடந்த 2 வருடங்களாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் இருந்தவரை மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்த போது பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். உறவினர் கிருஷ்ணமூர்த்தி புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.