மூத்த பத்திரிகையாளர் ஆனந்தி (86) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இலங்கையின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசியில் பணியாற்றியுள்ளார். இவரது பல்வேறு தொடர்கள், முக்கிய நபர்களின் பேட்டிகள் பிபிசி தமிழோசை நேயர்களிடையே மிகவும் பிரபலமானவை. இவர் 2005-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற நிலையில், லண்டனில் இன்று (பிப்.22) அவர் இயற்கை எய்தினார். ஆனந்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.