ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை (பிப்.23) துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வெற்றிபெறப்போவது யார் என இரு நாட்டு ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என கொல்கத்தாவில்சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.