கந்தம்பாளையத்தில் புகையிலை விற்பனை: ஒருவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் சண்முகானந்தா வடிவேலுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் அக்டோபர் இரண்டாம் தேதி மாலை 6: 30- மணியளவில், கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கந்தம்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அப்பகுதியில் செயல்படும் வெங்கட் டீ ஸ்டாலில், சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கூல் லிப் பாக்கெட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத விற்பனை ஈடுபட்ட கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் வயது 68 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 23 ஹான்ஸ் பாக்கெட்டுகளையும், இரண்டு கூல்லிப் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.