க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 21) தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமையில் பள்ளி வளாகத்தில் உறுதிமொழி ஏற்றனர். அப்போது, எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையை கொண்டு வர பாடுபடுவோம்.
தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையெழுத்திடுவோம். குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயரிடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத்தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உலகத் தாய்மொழி நாளில் இன்று உளமாற உறுதி கூறுகிறேன் என்று தலைமையாசிரியர் மூர்த்தி உறுதிமொழியை கூற மாணவர்களும் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.