கரூர்: ஓய்வு பெற்றவர் உடல்நலம் குன்றியதால் விரக்தியில் தற்கொலை

73பார்த்தது
புஞ்சை புகழூரில் ஓய்வு பெற்றவர் உடல்நலம் குன்றியதால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புஞ்சை புகழூர் அருகே காட்டூர், கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் வயது 65. இவர் அருகில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை. 

இதனால் விரக்தி அடைந்த மனநிலையில் வாழ்ந்து வந்த குணசேகரன், பிப்ரவரி 14-ஆம் தேதி காலை 11 மணியளவில், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அறிந்த அவரது மனைவி செல்வராணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த குணசேகரனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி