அரவக்குறிச்சி: மதிமுக சார்பில் கண் பரிசோதனை முகாம்

65பார்த்தது
அரவக்குறிச்சி ஒன்றிய மதிமுக, லோட்டஸ் கண் மருத்துவமனை இணைந்து அரவக்குறிச்சி தாலுக்கா ஆண்டிப்பட்டி கோட்டை தனியார் மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வரப்பட்டி பூபதி தலைமையில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றது. 

முகாமை மாவட்ட செயலாளர் ஆசை சிவா துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட அவை தலைவர் ராமசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கண் பார்வை குறைபாடு, கண்புரை நோய், கண் நரம்பு சம்பந்தமான குறைபாடு, கண்ணீர் அழுத்த நோய், கண்ணில் சீழ் வடிதல், மாறுகண், தலைவலி, தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற குறைபாடுகளை பரிசோதனை செய்து கண்டறிந்து அதற்குரிய மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தேவைப்படுபவருக்கு கண் அறுவை சிகிச்சைக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி