வாய்க்காலில் தண்ணீரை நிறுத்த கூடாது-விவசாயிகள் போராட்டம்.

76பார்த்தது
பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரை நிறுத்தக் கூடாது எனக் கூறி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தில் புகழுர் வாய்க்காலிலிருந்து பாப்புலர் முதலியார் வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் தோட்டக் குறிச்சி, தளவாபாளையம் வழியாக நெரூர் ஒத்தக்கடை வரை பாய்கிறது.

பாசன வாய்க்கால் தூர் வாராததால் கடைமடை பகுதியான ஒத்தக்கடை வரை தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது.

தற்போது தோட்டக்குறிச்சி & சிந்தாயூரில் வாய்க்கால் கரை கட்டுமான பணி நடத்த 7 நாட்கள் தண்ணீர் அடைக்க இருப்பதால், இது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம் இன்று காவிரி ஆற்றுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்றது.


இதில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். உதவி பொறியாளர் சதீஸ், கட்டுமானப் பணிகளை 7 நாட்களில் முடித்து அதன் பிறகு தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தார். அவரது முடிவிற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்கம் போல் தண்ணீர் அடைக்கும் ஏப்ரல் 30ம் தேதிக்குப் பிறகு பணிகளை மேற்கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்தனர்.

அதிகாரிகள் தண்ணீர் அடைக்கும் முடிவை கை விட்டால் தான் இந்த இடத்திலிருந்து செல்வோம் எனக் கூறி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி