கல்லூரி மாணவன் மாயம். மகனை காணவில்லை தாயார் புகார்.

73பார்த்தது
லிங்கம்மா நாயக்கன்பட்டியில் கல்லூரி மாணவன் மாயம். மகனை காணவில்லை தாயார் புகார்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, லிங்கம்ம நாயக்கன்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் வெற்றிவேல் வயது 17.

இவர் கரூரில் உள்ள கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி காலை 8 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவன் வெற்றிவேல் வீடு திரும்பவில்லை


மாணவன் வழக்கமாக செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால் தனது மகனை காணவில்லை என அவரது தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்


புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான கல்லூரி மாணவனை தேடி வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி