வள்ளிபுரத்தில் மூதாட்டி விஷம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா,
க. பரமத்தி அருகே வல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன் மனைவி தனபாக்கியம் வயது 60.
இவருக்கு நீண்ட நாட்களாக கால் வலி மற்றும் குறைந்த பார்வை திறன் உள்ள இவர் அண்மைக்காலமாக மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானார்.
இதனால் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக அவதிப்பட்டு வந்தவர், விரத்தியில் ஜனவரி 30 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் அவரது தோட்டத்து வீட்டில் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த அவரது கணவன் மகாதேவன் தனது மனைவியை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த தனபாக்கியம் சிகிச்சை பலனின்று பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவில் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மகாதேவன் காவல்துறையினருக்கு அளித்த புகார் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த தனபாக்கியத்தின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்
க. பரமத்தி காவல்துறையினர்.