தோட்டத்துக்குச் சென்ற முதியவரை பாம்பு கடித்து உயிர் இழப்பு.

75பார்த்தது
பெரிய கரியாம்பட்டியில் தோட்டத்துக்குச் சென்ற முதியவரை பாம்பு கடித்து உயிர் இழப்பு.

கரூர், வடக்கு காந்திகிராமம், பாரதியார் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 63

இவர் பிப்ரவரி 16-ம் தேதி அன்று, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பெரிய கரியாம்பட்டியில் உள்ள மொட்டையா பிள்ளை தோட்டத்திற்கு இரவு 8 மணி அளவில் சென்றுள்ளார்.

அப்போது சுப்பிரமணியை பாம்பு ஒன்று கடித்து உள்ளது. உடனடியாக சுப்பிரமணியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

அங்கு சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு ஒன்பது முப்பது மணி அளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அறிந்த சுப்பிரமணியின் மகன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த சுப்பிரமணியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி