நொய்யல் அருகே 336 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

60பார்த்தது
நொய்யல் அருகே 336 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது.

நொய்யல் அருகே முனி நாதபுரம் பகுதியில் காவல்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டூவீலரில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், பாப்பன தோட்டத்தை சேர்ந்த ராமசாமி வயது 62 எனவும், பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி வந்து கரூர், நாமக்கல் பகுதிகளில் விற்பனை செய்வதும் தெரியவந்தது.

மேலும், குந்தாணி பாளையத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் காரில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2, 7000- இரண்டு லட்சத்து 7 ஆயிரம்) மதிப்பில் 336 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி