விளவங்கோடு - Vilavengodu

திருவட்டார்: வெளிநாட்டிலிருந்து வந்த கொத்தனார் தற்கொலை

திருவட்டார்: வெளிநாட்டிலிருந்து வந்த கொத்தனார் தற்கொலை

திருவட்டார் அருகே வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் தங்கசாமி (54) இவர் கொத்தனார். இவருக்கு  ராணி (43) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். தங்கசாமி கடந்த ஏழு ஆண்டுகளாக வெளிநாட்டுக்கு சென்று கொத்தனார் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 12ஆம் தேதி காவல் கிணறு பகுதியில் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தங்கசாமி நேற்று(அக்.13) வீட்டின் வெளிப்பகுதியில் உள்ள கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பின்னர் தங்கசாமியின் உடலை குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவரது மனைவி ராணி அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా