தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (அக்.14) காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அக்.15 ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.