விளவங்கோடு - Vilavengodu

திற்பரப்பு: அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்

குமரி மாவட்டத்தில் ஆயுத பூஜை தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையான இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா தலங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம். இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காலை முதலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். திற்ப்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடியும் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வார விடுமுறை என்பதால் தங்கள் உறவுகளோடு கொண்டாடும் விதமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால் திற்பரப்பு அருவி பகுதி தற்போது களைகட்டி வருகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து வந்த மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு திற்ப்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வீடியோஸ்


ఉమ్మడి వరంగల్ జిల్లా