வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது குளிரூட்டப்பட்ட நாற்காலி பெட்டிகளைக் கொண்ட அதிவிரைவு ரயிலாகும். இதில் டிக்கட் பதிவு செய்யும் பொழுது உணவுக்கும் சேர்த்து பணம் வசூலிக்கப்படும். இந்த ரயிலில் நேற்று (அக் 13) இயக்குனர் பாத்திபன் பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட இரவு உணவு தரமற்று இருந்தது என்று ரயிலிலிருந்த புகார் புத்தகத்தில் அவர் பதிவுசெய்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரைப் படம்பிடித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (அக் 14) பதிவிட்டுள்ளார்.