திற்பரப்பு: தண்ணீர் இன்றி பாறையாக காட்சியளிக்கும் அருவி

73பார்த்தது
குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு அடுத்து பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக வருவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டுவதால் இங்கு அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் நெரிசல் அதிகமாக இருக்கும்.

     இந்த நிலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது. திற்பரப்பு அருவிப்பகுதியில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தாலும் தொடர்ந்து வறண்ட வானிலே நிலவி வருகிறது. மலைகளில் இருந்து வரும் நீரோடைகள், நீரூற்றுகள் வறண்டு விட்டதால் கடந்த சில மாதங்களாகவே ஆர்ப்பரித்துக் கொண்டு வந்த திற்பரப்பு அருவியில் தற்போது மிக குறைந்த அளவே தண்ணீர் கொட்டி வருகிறது. பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் தண்ணீர் விழுகிறது. மற்றப்பகுதிகளில் இருந்து தண்ணீர் இல்லாமல், எங்கும் பாறையாகவே காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நேற்றும்  இன்றும்  விடுமுறை நாள் என்பதால் காலி முதல்  பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தொடர்புடைய செய்தி