இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து விதவிதமாக கொண்டாடி மகிழ்ந்து வரும் நிலையில், கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பூத்துறை இஸ்லாமிய நற்பணி மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வை சமத்துவ இஃப்தார் நிகழ்வாக நடத்தினர்.
நேற்று மாலை நடந்த இந்த நிகழ்ச்சியில் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து சமுதாயம் மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் ஒற்றுமையாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வு மத நல்லிணக்கத்தை உணர்த்துவது போல் அமைந்தது குறிப்பிடத்தக்கது.