மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பை பன்வெல் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த 3-ந்தேதி பள்ளிக்கு புறப்பட்டார். அந்த சிறுமியை பக்கத்து வீட்டை சேர்ந்த வேன் டிரைவர் பள்ளியில் விடுவதாக ஏற்றிக்கொண்டு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வீடு திரும்பிய சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் அளித்த புகாரில் வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.