ஆணுறை பயன்படுத்துபவர்களில் சில பேர் இரண்டு ஆணுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்துவது நல்லது என்ற நினைப்பு பலருக்கும் இருக்கிறது. ஆனால் இது தவறான புரிதல் ஆகும். அதாவது, இரண்டு ஆணுறைகளை பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பை தராது. மாறாக, அது ஆணுறை கிழிவதற்கு வழிவகுக்கும். ஏனென்றால் உடலுறவு மேற்கொள்ளும்போது, இரண்டு ஆணுறைகளிலும் உராய்வு காரணமாக கிழிசல் ஏற்பட்டு, விந்தணு கசிவதற்கான வாய்ப்பும் அதிகமாகிறது.