மும்பை போலீசார் கடந்த மார்ச் 14ஆம் தேதி போவாய் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தி பாலியல் தொழில் செய்து வந்தவர்களை கைது செய்துள்ளனர். அந்த விபச்சார கும்பலிலிருந்து 26-35 வயதுக்குட்பட்ட 4 நடிகைகள் மீட்கப்பட்டனர். இந்த நடிகைகளில் ஒருவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட 60 வயது ஷியாம் சுந்தர் அரோரா கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்.