ராணிப்பேட்டை: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அண்ணன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் தாய்க்கு உறவு முறையில் அண்ணனான 17 வயது சிறுவன் மற்றும் 14 வயது சிறுவன், முனுசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் சிறுமியை கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.