குமரி: ஆலய மின்  விபத்து - மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பேட்டி

51பார்த்தது
புதுக்கடை அருகே இனயம்புத்தன் துறையில் ஆலய விழாவில்  மின்சாரம் தாக்கி 4 பேர் நேற்று மாலை பலியானார்கள்.   இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று விசாரணை நடத்தினார். மேலும் விபத்தில் இறந்த நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அவர் கூறியதாவது: -

       திருவிழா நடந்த ஆலயத்தில் அலுமினியம் மற்றும் இரும்பாலான சக்கர ஏணி ஒன்றை ஆலயத்தின் எதிர்ப்புறம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது உயரமான அந்த ஏணியின் உயரத்தை குறைக்காமல் நகர்த்தி இருக்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் மீது ஏணி உரசி உள்ளது. இதில் ஏணியை தள்ளியவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது.

       அவர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்கள். நான்கு பேர்  உடலும் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை இன்று 2-ம் தேதி நடக்கிறது என அவர் கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி