செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

72பார்த்தது
செங்கல்பட்டு ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற வாகன சட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு.!!ஜனவரி 01 முதல் ஜனவரி 31, 2025 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோவன் தலைமையில் சாலை பாதுகாப்பு மற்றும் வாகன சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

எனவே முதலுதவி சிகிச்சை பற்றி பொதுமக்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று தனியார் அமைப்பின் சார்பில் எவ்வாறு விபத்து நேரிட்டவர்களுக்கு முதலுதவி செய்வது என்பது ஒத்திகை கட்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அமிதா பானு அவர்கள் வாகன சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து சாலை விதிகளை மதிப்போம், சீட் பெல்ட் அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனத்தை இயக்குவோம், இருசக்கர வாகனத்தில் வெளியே செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி