காஞ்சிபுரத்தில் 76வது குடியரசு தின விழா

60பார்த்தது
76வது குடியரசு தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

பல்வேறு துறைகளின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 76லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.



நாட்டின் 76 வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதனை யொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் முவர்ண
பலூனையும், வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பறக்கவிட்டார்.

பல்வேறு துறைகளின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 76லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி