பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நாதக தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளர் சக்திவேலுக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சக்திவேல் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சக்திவேலுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.