மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து விடுவித்து கொச்சி கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அவருடன் சேர்த்து இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரேஷ்மா ரங்கசுவாமி, ப்ளெஸ்ஸி சில்வெர்ஸ்டெர், டின்சி பாபு, சினேகா பாபு, ஓகோவ் சிகோஸி காலின்ஸ், பிரித்விராஜ் ஆகிய 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு பதியப்பட்ட மேற்கண்ட வழக்கின் விசாரணை கடந்த சுமார் பத்தாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.