கோழிக்கோட்டை சேர்ந்த முகமது – அபினா தம்பதியின் 8 மாத குழந்தை ஒன்று வீட்டின் வளாகத்தில் இருந்த பாட்டிலை எடுத்து விளையாடி உள்ளது. அப்போது பாட்டிலில் இருந்த மூடியை கழற்றி வாயில் வைத்த போது அந்த மூடி, தெரியாமல் குழந்தையின் தொண்டைக்குள் சிக்கியுள்ளது. மூச்சுத்திணறி மயங்கிய குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து உடற்கூறாய்வு செய்தபோது அந்த மூடி அகற்றபட்டுள்ளது.