மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏப்.01-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 25 ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களிலிருந்து அவர்களின் சராசரி சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியமாகப் பெறுவார்கள். மேலும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தவர்கள் விகிதாசார அடிப்படையிலும், 10 ஆண்டுகளுக்கு கீழ் பணிபுரிந்தவர்கள் மாதத்திற்கு ரூ.10,000 ஓய்வூதியம் பெறுவார்கள்.