காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்

56பார்த்தது
காஞ்சிபுரம் வைகுண்டபெருமாள் கோயில் சீரமைப்பு பணி தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில், 57வது திவ்யதேசமாக விளங்கும் காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில், பரமேஸ்வர விண்ணகரம் என அழைக்கப்படுகிறது. தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு நடந்தது. 

இந்நிலையில் கோவில் கோபுரம் பொலிவிழந்த நிலையில் உள்ளது. எனவே, கோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தொல்லியல் துறை முடிவு செய்தது. திருப்பணி துவங்க உள்ளதையொட்டி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதி கோவிலில் பாலாலயம் நடந்தது. இதையடுத்து தொல்லியல் துறையினர், ரசாயன பொறியாளர் பிரிவு வாயிலாக கோவில் கோபுரங்களில் படிந்திருந்த பாசி மற்றும் துாசுகளை அகற்றி, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி