செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர், கம்பர் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 20வது ஆண்டு விழா நடந்தது. செங்கல்பட்டு தி.மு.க., எம்.எல்.ஏ., வரலட்சுமி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்ரீதேவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அதேபோல், மானாமதுரை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.