தனது கடந்த காலத்தை நினைவுக்கூறும் வகையில் நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் பில்டிங் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் சூரி பெயிண்டராக வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.