இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 200 க்கும் மேற்பட்ட ஆமைகள் கரை ஒதுங்கியதாக கூறப்படும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் வடநெம்மேலி மாமல்லபுரம் சுற்றுப்புற கடலோர மீனவ கிராமங்களான நெம்மேலி, தேவநேரி, பட்டிபுலம், வெண்புருஷம், கொக்கிலமேடு, சதுரங்கபட்டினம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 20 க்கும் மேற்பட்ட ஆமைகள் ஆங்காங்கே இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
இதை அப்பகுதி மீனவர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ஆமைகள் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை கடற்கரை ஓரங்களில் வந்து முட்டையிடுவது வழக்கம். அந்த மூன்று மாதங்களில் முட்டையிட வரும் ஆமைகள் விசைப்படகுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் நிலவுவதாகவும், விசைப்படகுகளை இந்த மூன்று மாதங்களுக்கு இயக்க கூடாது என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.