நடிகர் ஆர்யா, பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் '2018' எனும் திரைப்படம் வெளியானது. இவரின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஆர்யா உடன் இவர் இணைந்திருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.