தாம்பரம் - Tambaram

கூடுவாஞ்சேரியில் பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

சென்னை புறநகர் பகுதியான கூடுவாஞ்சேரி பகுதியில் நியூட்ரிஷன் சென்டர் நடத்திய வருபவர் காசியம்மாள் (வயது 36). இவர் தனது குடும்பத்துடன் பாண்டூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல நேற்று(அக்.25) தனது நியூட்ரிஷன் சென்டரில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனை அறிந்த வாலிபர் இளங்கோவன் (வயது 29) என்பவர் தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் ஸ்கூட்டியில் சென்ற காசியம்மாளை சுமார் 7 கிலோமீட்டர் வரை ஃபாலோ செய்து பின்னாலேயே ரகசியமாகச் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பாண்டூர் அருகே செல்லும் போது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் இளங்கோவன் காசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் பறந்துள்ளார். பின்பு சம்பவம் குறித்து காசியம்மாள் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் செல்வி வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளியை 12 மணி நேரத்தில் ஸ்கெட்ச் போட்டு மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளார்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా