ஜி. எஸ். டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

55பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியில் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதாலும் அடிக்கடி இரயில்வே கேட் மூடப்படுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றது.

சிங்கபெருமாள்கோவில் - ஒரகடம் - இணைக்கும் இரயில்வே மேம்பாலம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பணிகள் நடைபெற்று வருகின்றது 75 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ஆறு மாதத்தில் 100 சதவிகிதம் பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டிற்க்கு வரும் என கூறப்படுகின்றது.

ஒரகடம் மற்றும் ஸ்ரீபெருமந்தூர் பகுதியில் அதிக தொழிற்சாலை உள்ளதால் 24 மணி நேரமும் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். அடிக்கடி சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள இரயில்வே கேட் மூடப்படுவதாலும் இரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதாலும் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகள் கனரக லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர் பபள்ளி கல்லூரிக்கு மாணவர்கள் வேலைக்கு செல்லும் பொதுமக்களும் அவசர உதவிக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் கூட சரி நேரத்திற்க்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகின்றது.

தொடர்புடைய செய்தி