சென்னை கிரேட்டர் சிட்டி அரிமா சங்கம் மற்றும் பூபதி நாயக்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் 14 ஆம் ஆண்டு மருத்துவ முகாம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் ஈச்சங்கரணை கிராமத்தில் சென்னை கிரேட்டர் சிட்டி அரிமா சங்கம் மற்றும் பூபதி நாயக்கர் நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மாபெறும் மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம் அவ்வாறு 14 ஆம் ஆண்டாக மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமில் கண் சிகிச்சை முகாம் அறக்கட்டளை நிர்வாகிகள் அரிமா தனகுமார், சுந்தரேசன், நந்தகுமார் ஆகியோரது ஏற்பாட்டில் அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் டி. முருகேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளரும் காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. விஸ்வநாதன் கலந்துக் கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை துவக்கி வைத்தார். அரிமா சங்கத்தின் முன்னாள் ஆளுநர் என். ஆர். தனபாலன், சேலையூர் காவல் உதவி ஆணையர் (தாம்பரம் காவல்) கிறிஸ்டியன் ஜெயசீல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீ. தமிழ்மணி, மாவட்ட கவுன்சிலர் கலாவதி நாகமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணி நிமித்தமாக
அயல் நாடு சென்றிருக்கும் திருப்போரூர் எம்
எல் ஏ எஸ் எஸ் பாலாஜி காணொளி காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.