செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் ஏற்பனவே 3 அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது அதே பகுதியில் 13வது வார்டில் உள்ள பாவேந்தர் சாலையில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள், கோயில்கள் உள்ள பகுதி என்பதாலு, ம் பொதுமக்களுக்கும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் இடையூராக துவக்கப்பட்டுள்ள இந்த கடையை அகற்ற துறைரீதியான அதிகாரிகளிடம் அப்பகுதிமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் புகார் மனுக்களை அளித்திருந்தனர்.
ஆனால் இரவோடு இரவாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று தற்போது கடை திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் அப்பகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பில் மறைமலை நகர் முன்னாள் நகர மன்றத் தலைவர் கோபிகண்னன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடையை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் கட்சி நிர்வாகிகளை தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் கடமையை வாக்குவாதம் ஏற்பட்டது இதன் காரணமாக சிறிது நேரம் பகுதியில் பரபரப்பான சுழல் காணப்பட்டது.