மறைமலைநகரில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

85பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் மண்டல அளவிலான செயற்குழு
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், கட்டாயம் நாம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோட இருக்க வேண்டும், வரும் தேர்தல் காழ்புணர்ச்சிக்காக நாம் இதை செய்கின்றோம் என்று சீன் போடுவதாக சிலர் டிபெட்டில் கூறுகிறார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நமக்கு தேவை இல்லை, மது போதையால் பாதிக்கப்படும் மக்களை யார் காப்பாற்ற போகிறார்கள், நாம் தான் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். இந்த போராட்டத்தை நடத்துவதால் தேர்தல் களத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படும் கூட்டணியில் சிக்கல் ஏற்படும் 2026 தேர்தலில் நமக்கு பின்னடைவு ஏற்படும், என்ற நிலை ஏற்பட்டால் கூட இந்த போராட்டம் நடத்துவதின் நோக்கத்தில் இருந்து ஒருபோதும் விலக கூடாது. திமுக, அதிமுக கட்சிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகபெரிய கட்சியாக விசிக உள்ளது. இந்த மது ஒழிப்பு போராட்டத்தை நடத்துவதின் மூலம் நமக்கு எந்த விளைவுகள் வந்தாலும் அந்த விளைவுகளை எதிர்கொள்வதற்க்கு தயாராக உள்ளோம். ஒவ்வொரு கட்சியினரும் மது விலக்குக்கு உடன்பாடு இருக்கிறது, இதிலென்ன சிக்கல் உள்ளது தமிழ்நாட்டில் மது கடைகளை ஒழிக்க என கேள்வி எழுப்பினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி