செங்கற்பட்டு மாவட்ட ஆர். எஸ். எஸ் சார்பாக சங்கம் துவங்கிய விஜயதசமி நாளை ஒட்டி, மறைமலை நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது
ஊர்வலத்தை அறிவழகன் சமூக ஆர்வலர் அவர்கள், கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அதனைத் தொடந்து ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் மறைமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக இசைவாத்தியம் முழங்க அணிவகுத்து சென்றனர்.
அணிவகுப்பு பாதையில் மகளிர் மலர் துாவி வரவேற்றனர்.
ஆர். எஸ். எஸ். , அணிவகுப்பானது மறைமலைநகரின் பாவேந்தர் சாலையில் துவங்கி , திருவள்ளுவர் சாலை, வள்ளல் MGR சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக நகரின் முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் பாவேந்தர் சாலையில் முடிவடைந்தது.
அணி வகுப்பில் 150க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் தேச பக்தர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர்.
ஆர். எஸ் எஸ் பொதுக்கூட்டத்திற்கு பிரகாஷ் சமூக ஆர்வலர் அவர்கள் தலைமைவகித்தார்
இந்த ஊர்வலத்திற்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.