செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியில் தமிழக அரசின் தொழில் வணிகத்துறை சார்பில் கொடிய விஷமுள்ள பாம்புகளிடம் இருந்து விஷம் எடுக்கும் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 இருளர் இனத்தவர்கள் பாம்பு பிடித்து இந்த பாம்பு பண்ணைக்கு கொடுத்து வருகின்றனர்.
இந்த பண்ணைக்கு கொண்டு வரப்படும் நல்லபாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன் ஆகிய 4 விஷ
பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்த பண்ணை திறந்து தற்போது 1½ மாதங்கள் கடந்துள்ள நிலையில் புதுடெல்லியில் உள்ள மத்திய வனத்துறை சார்பில் நல்லபாம்பு, கண்ணாடி விரியன் பாம்புகளை பிடிக்க இன்னும் அனுமதி வழங்கி அரசாணை வழங்கப்படாததால், தற்போது இங்கு கட்டுவிரியன், சுருட்டை விரியன் என 2 வகை பாம்புகள் மட்டுமே பராமரிக்கப்பட்டு விஷம் எடுக்கப்படுகின்றன.
அதேபோல் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்பினையும் ஆர்வமாக பார்ப்பார்கள். இந்த 2 வகை பாம்புகள் இல்லாததால் இந்த பாம்பு பண்ணைக்கு சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.