செங்கல்பட்டு மருத்துவமனையில் புதிய தங்கும் வளாகம் திறப்பு

62பார்த்தது
தனியார் மருத்துவமனைகளை பொறுத்தவரை சிசேரியன் என்பது பேக்கேஜ் திட்டம், ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு அந்த நிர்பந்தம் இல்லை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை சிசேரியன் இல்லாத மருத்துவமனையாக உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுரை

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் சுமார் 1. 32 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் நல பிரிவு அருகே பார்வையாளர்கள் தங்கும் வளாகம் தனியார் நிதி நிறுவன நிதி உதவியுடன் கட்டப்பட்டு திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தனர்.

இந்த கட்டிடத்தில், ஒரே நேரத்தில் நோயாளிகளின் உடனிருப்பவர்கள் 150-பேர் தங்கும் வகையில் அமுக்கப்பட்டு உள்ளது. இரண்டு அடுக்குகளை கொண்ட கட்டிடத்தில் கீழ் தளத்தில் 75-பேரும், மேல் தளத்தில் 75-பேரும் தங்கும் வகையிலும், பொருட்களை வைத்துக்கொள்ள அலமாரிகள், கழிப்பறைகள், குளியலறைகள், துணி மாற்றும் அறைகள், சிசிடிவி கேமரா உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி